Quantcast
Channel: Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
Viewing all 28777 articles
Browse latest View live

கோல்டன் குளோப் 2015 - பாய்வுட் படத்துக்கு மூன்று விருதுகள்

$
0
0
2015-ம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருதுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. பாய்வுட் படம் மூன்று விருதுகளை வென்றுள்ளது. 2015-ம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆஸ்கர் விருதுகளுக்கு அடுத்து முக்கியமான கவுரவமாகப் பார்க்கப்படுவது இந்த கோல்டன் குளோப் விருது. ரிச்சர்ட் லிங்க்லேடர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான பாய்வுட் படம் 5 பிரிவுகளில்

87 ஆவது “ஆஸ்கர்” விருது திருவிழா – பரிந்துரைக்கப்பட்டுள்ள திரைப்படங்கள் இவைதான்!

$
0
0
வாஷிங்டன்: உலக திரைப்படங்களுக்கான 87 ஆவது ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்களின் பெயர்கள் இன்று வெளியிடப்பட்டன. அவற்றில் கிரைம் சஸ்பென்ஸ் பேக்கிரவுண்டில் உருவான "தி கிராண்ட் புதாபெஸ்ட் ஹோட்டல்" திரைப்படம், காமெடி கலந்த கற்பனை படமான "பேர்ட்மேன்" ஆகியவை அதிகபட்சமாக 9 நோட்களை ஸ்கோர் செய்தது. அதற்கு

இந்தியாவைச் சேர்ந்த இருவருக்கு 'கிராமி' இசை விருது!

$
0
0
இசை உலகின் உயரிய கிராமி விருதினை இந்தியாவைச் சேர்ந்த ரிக்கி கெஜ், நீல வாஸ்வாணி ஆகியோர் வென்றுள்ளார். 57வது கிராமி விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது. இதில் நியூ ஏஜ் ஆல்பம் பிரிவில் 'வைன்ட்ஸ் ஆப் சம்சாரா' ஆல்பத்திற்காக ரிக்கி கெஜ்-க்கு கிராமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர்

ஃபெமினா விருதுகள்: சிவப்பு கம்பளத்தில் ஒய்யாரமாக நடந்த நடிகைகள்

$
0
0
மும்பை: மும்பையில் நடந்த ஃபெமினா பியூட்டி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு நடிகைகள் அசத்தலாக வந்திருந்தனர்.ஃபெமினா பியூட்டி விருதுகள் வழங்கும் விழா புதன்கிழமை இரவு மும்பையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கஜோல், ஹூமா குரேஷி உள்ளிட்ட ஏராளமான பாலிவுட் நடிகைகள் வந்திருந்தனர்.நடிகைகள் அனைவரும் கவுன் அணிந்து வந்திருந்தனர். யாராவது சேலையில் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

சிறந்த நடிகர் தனுஷ், வில்லன் பாபி சிம்ஹா.. சிறந்த அறிமுக நடிகை கேத்தரின்!

$
0
0
சென்னை : தமிழ் திரையுலகிற்கான 8வது எடிசன் விருதுகள் 2015 நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சிறந்த நடிகர், நடிகை உள்ளிட்டவர்களுக்கு விருதுகள் வழங்கப் பட்டது. கடந்த 7 ஆண்டுகளாக உலக தமிழர்கள் இணையம் மூலமாகவும், வாக்கு சீட்டு மூலமாகவும் தமிழ்திரை உலகினரை தேர்ந்தெடுத்து எடிசன் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக 2014

இந்த வருடத்தின் கேவலமான நடிகை தமன்னா, சோனாக்ஷி.. டைரக்டர் பிரபுதேவா... இது மும்பை கூத்து!

$
0
0
மும்பை: பாலிவுட்டில் சிறந்த நடிகர், நடிகைகளுக்கு மட்டும் விருது வழங்காமல் மோசமான நடிப்பினை வெளிப்படுத்தியவர்களையும் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு ஆண்டும் விருதுகளை வழங்கி வருகின்றது ஒரு அமைப்பு. அந்த விருதின் பெயர் "கோல்டன் கேலா". பர்மா என்பவர் இதை துவங்கினார். கடந்த சில வருடங்களாகவே இந்த விருதுகளை அவர் வழங்கி வருகிறார். நடிகர், நடிகைகள் ஜாலிக்காக

ஆஸ்கர் 2015: இன்டர்ஸ்டெல்லாருக்கு சிறந்த கிராபிக்ஸுக்கான விருது.. சிறந்த துணை நடிகர் சிம்மன்ஸ்!

$
0
0
லாஸ் ஏஞ்சல்ஸ்: 87வது ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் இந்த விழாவில் சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை ஜே.கே. சிம்மன்ஸ் பெற்றுள்ளார். விப்லாஷ் திரைப்படத்தில் நடத்ததற்காக ஜே.கே. சிம்மன்ஸ் ஆஸ்கர் விருது பெற்றுள்ளார். விருது பெற்ற சிம்மன்ஸ் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

2015 ஆஸ்கர் விருதுகள்: சிறந்த நடிகர் எட்டி ரெட்மேனே, சிறந்த நடிகை ஜூலியன் மூர்

$
0
0
லாஜ் ஏஞ்சல்ஸ்: 87வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த நடிகருக்கான விருதினை எட்டி ரெட்மேனேவும், சிறந்த நடிகைக்கான விருதினை ஜூலியன் மூரும் வென்றனர். 87வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடந்தது.இதில் பல்வேறு பிரிவுகளின் கீழ் ஹாலிவுட்டில் தயாரான படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன (முதல் பகுதி ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது).

எதிர்ப்பார்த்ததைப் போலவே... பேர்ட்மேனுக்கு சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருது!

$
0
0
லாஸ் ஏஞ்சல்ஸ்: எதிர்ப்பார்த்ததைப் போலவே, அலெஜான்ட்ரோ ஜி இனாரிட்டு இயக்கிய பேர்ட்மேன் படத்துக்கு இந்த ஆண்டின் சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. பெருமை மிக்க இந்த விருதுக்காக அமெரிக்கன் ஸ்னிப்பர், பேர்ட்மேன், பாய்ஹூட், தி கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல், தி இமிடேஷன் கேம், விப்லாஷ், தி தியரி ஆப் எவ்ரிதிங் மற்றும் செல்மா ஆகிய

ஆஸ்கர் விருதுகளை அள்ளிய பேர்ட்மேன், தி கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல், விப்லாஷ்

$
0
0
லாஸ் ஏஞ்சல்ஸ்: 87 வது ஆஸ்கர் விருது விழாவில் அதிக விருதுகளை அள்ளின பேர்ட்மேன், தி கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல் மற்றும் விப்லாஷ். 2015 ம் ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது.

கமலுக்குக் கிடைக்காட்டியும், கமல் பட டெக்னீஷியனுக்கு ஆஸ்கர் கிடைச்சிருச்சே!

$
0
0
சென்னை: கமல்ஹாசன் படத்து டெக்னீஷியன் ஒருவருக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. காக்கை உட்கார பனம் பழம் விழுந்த கதை போல இதுவும் தற்செயலானதுதான். கமல்ஹாசனின் உத்தமவில்லன் படத்தின் சவுண்ட் மிக்ஸராக அதாவது ஒலிக் கலப்பாளராக பணியாற்றி வருபவர் கிரேக்மேன். இவர் ஒரு ரீரெக்கார்டிங் மிக்ஸர் ஆவார். உத்தமவில்லன் படத்திற்காக இவரை பிரத்யேகமாக அழைத்து வந்துள்ளனர். இவருக்குத்தான்

மனோரமாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

$
0
0
மூத்த நடிகை மனோரமாவுக்கு மகளிர் தினத்தை முன்னிட்டு வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கியது டேக் கேர் இந்தியா என்ற தனியார் அமைப்பு. டேக் கேர் சார்பில் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இந்த விருதினை மனோரமாவிடம் நேரில் சென்று வழங்கினார். மகளிர் தினத்தை முன்னிட்டு, ‘டேக் கேர் இந்தியா' நிறுவனம் சார்பாக பல்வேறு துறைகளில் சிறந்து

‘பாலிவுட்டின் முடிசூடா மன்னன்’ நடிகர் சசிகபூருக்கு தாதா சாகேப் பால்கே விருது!

$
0
0
டெல்லி: மூத்த பாலிவுட் நடிகரான சசிகபூருக்கு திரைத்துறையின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது. பாலிவுட் திரையுலகில் முடிசூடா மன்னனாக விளங்கிய சசிகபூர், 1938ம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்தவர். தனது நான்கு வயது முதலே நடிக்கத் தொடங்கிய சசிகபூர், இதுவரை 160க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

சிறந்த பிராந்திய மொழிக்கான தேசிய விருதை பெறுகிறது ‘குற்றம் கடிதல்’!

$
0
0
குற்றம் கடிதல் படத்துக்கு சிறந்த பிராந்திய மொழிப் படத்துக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. ஜேஎஸ்கே ஃபிலிம் கார்பரேஷன் நிறுவனம் மற்றும் க்றிஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள ‘குற்றம் கடிதல்' திரைப்படம் பல்வேறு சர்வதேச விருதுகளைப் பெற்று வருகிறது. இன்னமும் திரைக்கு வராசத இந்தப் படம், 62 ஆம் தேசிய

தமிழ் சினிமாவுக்கு 7 தேசிய விருதுகள்

$
0
0
இந்த ஆண்டு தமிழ் சினிமாவுக்கு 7 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.சிறந்த துணை நடிகர், சிறந்த பாடலாசிரியர் உள்பட ஏழு பிரிவுகளில் இந்த விருதுகளைப் பெற்றுள்ளது தமிழ் சினிமா.

கன்னட நடிகர் விஜய்க்கு சிறந்த நடிகர் தேசிய விருது.. சிறந்த நடிகை கங்கனா ரனவத்

$
0
0
நானு அவனல்ல அவளு படத்தில் நடித்த கன்னட நடிகர் விஜய், குயீன் படத்தில் நடித்த இந்தி நடிகை கங்கனா ரனவத் ஆகியோருக்கு சிறந்த நடிகர் - நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. தேசிய அளவில் சிறந்த பொழுதுபோக்குப் படமாக ப்ரியங்கா சோப்ரா நடித்த மேரி கோம், சிறந்த இந்திப் படமாக கங்கனா ரனவத்

அப்பா போல முதல் பாடலில் விருது... அப்பாவுக்கு மாமா.. மகளுக்கு மாப்பிள்ளை!

$
0
0
அப்பா உன்னிகிருஷ்ணனைப் போலவே முதன் முதலாக சினிமாவில் பாடிய பாடலுக்கு தேசிய விருது பெற்றுள்ளார் அவரது மகள் உத்ரா. ஒரே ஒரு வித்தியாசம் அப்பா பாடியது ஏ.ஆர். ரகுமான் இசையில் மகள் பாடியது அவரது மருமகன் ஜி.வி.பிரகாஷ் இசையில் என்பதுதான். நான்கு வயதில் இருந்து கர்நாடக சங்கீதம் கற்றுக் கொண்டிருந்தாலும் முதன் முதலாக

மூன்றே படங்கள்... இரண்டு தேசிய விருதுகள்... பலே விஜய்!

$
0
0
விஜய்க்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது என்று அறிவிப்பு வந்ததும் நிறைய பேர் ஆச்சர்யத்தின் எல்லைக்குப் போய்விட்டார்கள். அவர் நடித்த படத்தைச் சொன்ன பிறகுதான், இந்தப் பெயரில் இன்னொரு நடிகர் இருப்பதைப் புரிந்து கொண்டார்கள்.தேசிய விருது பெற்ற இந்த விஜய்யின் முழுப் பெயர் சஞ்சாரி விஜய். அடிப்படையில் நாடக நடிகர்.

இரண்டாவது முறையாக விருது பெறுவதில் மகிழ்ச்சி! - நா.முத்துக்குமார்

$
0
0
சென்னை: தொடர்ந்து இரண்டாவது முறையாக தேசிய விருது பெற்றது மகிழ்ச்சியளிப்பதாக பாடலாசிரியர் நா.முத்துக்குமார் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: "தங்க மீன்கள்' படத்துக்காக நான் எழுதிய 'ஆனந்த யாழை மீட்டுகிறாய்...' பாடல் முதல் முறையாக என்னை தேசிய விருது மேடைக்குக் கொண்டு சென்றது. அதைத் தொடர்ந்து நிகழாண்டுக்கான தேசிய விருது

பாடகர் எஸ்பிபிக்கு கேரள அரசின் அரிவராசனம் விருது

$
0
0
திருவனந்தபுரம்: பிரபல பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியத்துக்கு அரிவராசனம் விருது வழங்கியுள்ளது கேரள அரசாங்கம். கேரள அரசு சார்பில் ஆண்டு தோறும் சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெறும் விழாவில், இந்த அரிவராசனம் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் விருது குறித்து கேரள தேவசம் போர்டு துறை மந்திரி வி.எஸ்.
Viewing all 28777 articles
Browse latest View live




Latest Images